Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை கொண்டு செல்ல லாரி வரல… வாக்குச்சாவடி மையத்தில்… விடிய விடிய காத்திருந்த ஏஜெண்டுகள்..!!

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றிய வாக்குச்சாவடி மையங்களில் பூத் ஏஜெண்டுகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் விடிய, விடிய காத்திருந்தனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. எஸ்.புதூர் ஒன்றியப் பகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. எஸ்.புதூர் ஒன்றியத்தில் 56 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்கு மின்னணு எந்திரங்களை எடுப்பதற்காக நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டது அந்த வாக்குச் சாவடிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் ஒவ்வொரு மண்டலம் வாரியாக லாரிகளில் ஏற்றப்பட்டனர்.

இந்நிலையில் மூன்றாவது மண்டலத்தில் உள்ள புழுதிபட்டி, செட்டிகுறிச்சி, நாகமங்கலம், பிரான்பட்டி, கணபதிபட்டி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் லாரி பதிவான வாக்கு பெட்டிகளை எடுக்க வராததால் பூத் ஏஜெண்டுகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் விடிய, விடிய காத்திருந்தனர். நேற்று காலை 7 மணிக்கு தான் நாகமங்கலம் வாக்குச் சாவடியில் உள்ள மின்னணு எந்திரங்கள் லாரில் எடுத்துச் செல்லப்பட்டது. அதன் பின்னரே பூத் ஏஜெண்டுகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டனர்.

Categories

Tech |