Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதை சரி செஞ்சு குடுங்க… சாலையை மறித்த பொதுமக்கள்… அதிகாரிகள் வாக்குறுதி.!!

பெரம்பலூர் அருகே மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரி செய்து கொடுக்காத ஆத்திரத்தில் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரணாரை கிராமத்தில் சென்ற 12-ஆம் தேதி அன்று திடீரென மின்மாற்றி வெடித்து மின் தடை ஏற்பட்டுள்ளது. அந்த மின்மாற்றியை மின் ஊழியர்கள் சரி செய்யாமல் இருந்ததால் அரணாரை கிராமத்தில் நேற்று முன்தினம் மின்சாரம் இல்லாமல் அப்பகுதியே இருளில் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சரக்கு வாகனத்தில் மறித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த மின்வாரிய அதிகாரிகள், பெரம்பலூர் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரிபார்த்து மின்வினியோகம் சரியாக செய்யப்படும் என்று அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் மரியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Categories

Tech |