கட்சி தொடர்பான விவரங்களை ரிப்போர்ட் கொடுக்கும்படி முதல்வர் ஸ்டாலின் உளவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பிரம்மாண்ட வெற்றி பெற்றாலும் அதனை கொண்டாட முடியாத நிலைக்கு அக்கட்சித் தலைவர் மு க ஸ்டாலினை சில நிர்வாகிகள் தள்ளியுள்ளனர். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் திமுகவினரை நிறுத்தி வெற்றி பெற வைத்தது, தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக போட்டி வேட்பாளரை களமிறக்க வெற்றி பெற செய்தது என பல்வேறு நெருடல்களை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த சூழலில்தான் திமுகவுக்கு உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது. உட்கட்சி தேர்தலை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தி நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி.
2016ஆம் ஆண்டு திமுக உட்கட்சித் தேர்தல் நடைபெற்றது. அதன் பின் 2020ஆம் ஆண்டு தேர்தல் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் கனமழை, வெள்ளம் போன்ற பல்வேறு காரணங்களால் தேர்தல் நடத்தப்படவில்லை. இதுபற்றி தேர்தல் ஆணையத்தில் முறையீட்டு டி ஆர் பாலு அவகாசம் வாங்கியுள்ளார். இந்நிலையில் உட்கட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்ற நெருக்கடி உருவாகியுள்ளது. இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்தபின் உட்கட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது. தலைமை கழக நிர்வாகிகள் மாவட்ட கிளை கழக நிர்வாகிகள் என அனைத்து தரப்புக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது.
தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் என தலைமை கழக முக்கிய பதவிகள் போட்டி இருக்காது. திமுகவில் 77 மாவட்ட அமைப்புகள் உள்ளது மாவட்ட செயலாளர் பதவிகளை தங்களது ஆதரவாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் தலைமைக்கு அமைச்சர்கள் ஈடுபடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சி தலைமைக்கு கட்டுப்படாமல் செயல்பட்டவர்கள், அவர்களை தூண்டி விட்டவர்கள், பின்னணியில் உள்ளவர்கள் போன்றவர்கள் விபரங்களை ரிப்போர்ட் கொடுக்கும்படி முதல்வரின் உளவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இது சீக்ரெட்டாக இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதாம். ஏனெனில் முதல்வர் பெரிதும் நம்பிய சில அமைச்சர்களும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் உள்ளடி வேலைகள் பார்த்துள்ளதாக அவருக்கு தகவல் சென்று உள்ளது. எனவே யாருக்கு பதவி கொடுப்பது, யாரை ஓரங் கட்டுவது என்பது குறித்த முதல்வர் முடிவெடுக்கும் முன் உளவுத்துறையின் ரிப்போர்ட்டை எதிர்பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.