சட்டமன்றத்தில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்களும், பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும்… மாண்புமிகு குடியரசு தலைவர் அலுவலகத்தில் நீட் தேர்வால் மாணவனுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்தும், இந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் பெற ஏற்பட்டுள்ள காலதாமதம் குறித்தும் விரிவாக எடுத்துரைக்க கூடிய மனு ஒன்றை அளித்து இருக்கின்றார்கள். பின்னர் அந்த மனு மேல் நடவடிக்கையாக ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக மாண்புமிகு குடியரசுத்தலைவர் செயலகத்தின் சிறப்பு பணி அலுவலர் அவர்கள் தெரிவித்து இருக்கின்றார்கள்.
எனவே இது குறித்து மேலும் வலியுறுத்திட அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாண்புமிகு உள்துறை அமைச்சரை நேரில் சந்திக்க நேரம் கேட்டனர். ஆனால் இதுவரை அவர்களை சந்திக்க மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் மறுத்து வருகிறார்.மக்கள் பிரதிநிதிகளை மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் சந்திக்க மறுப்பது மக்களாட்சியின் மாண்புக்கு எதிரானது.
8 1/2 கோடி தமிழக மக்களுடைய எதிர்பார்ப்புகளையும், நமது மாணவர்களுடைய கனவையும் நிறைவு செய்வதற்கான இந்த அரசின் முயற்சிகள் வெற்றிபெற வேண்டும். அதற்காகவே இவ்வாறு பல வழிகளில் இந்த அரசு அயராது முயற்ச்சி செய்து வருகிறது. பல நாட்கள் கடந்தும் உள்துறை அமைச்சர் சந்திக்க நேரம் ஒதுக்காத நிலையில் அவரிடம் கொடுக்கபடவேண்டிய மனு அவருடைய அலுவலகத்தில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
எனவே நீட் போன்று நுழைவு தேர்வுக்கு எதிரான நமது இந்த போராட்டத்தையும், இது சமூக நீதியின் அடுத்த கட்ட போராட்டம் என கருதி, நாம் நமது கொள்கையிலிருந்து எள் அளவிற்கு கூட பின்வாங்காமல் முன்னேறி செல்வோம். மேற்கூறிய இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து நாம் ஒருமித்த நிலைபாட்டை எட்டுவதற்கு, நாம் நமது சட்டமன்றத்தில் இருக்கின்ற அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது என்று முடிவு செய்து இருக்கிறோம்.
அந்தக் கூட்டத்தில் நீங்கள் அனைவரும் கட்சித் தலைவர்களை உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன், நீங்களும் சேர்ந்து நிறைவேற்றிய இந்த தீர்மானம் தான். அதனால் இதன் முக்கியத்துவத்தை கருதி, அனைத்து கட்சி தலைவர்களும் அந்த கூடத்தில் கலந்து கொள்ள வேண்டும். இந்த கூட்டத்தில் எடுக்கின்ற முடிவுகளின் அடிப்படையிலே நீட் தேர்வுக்கான நமது போராட்டம் தொடரும் என்பதை தெரிவித்துகொள்கிறேன்.