மாவட்ட வாரியாக தீர்மானம் நிறைவேற்றினால் கட்சிக்குள் பிளவு வரும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். கட்சியில் யாரை சேர்க்க வேண்டும், யாரை நீக்க வேண்டும் என்று கட்சியின் பொதுக்குழு தான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தலைமையிலான தேனி கூட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினரின் கோரிக்கைக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.