செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆய்வின் முடிவுக்கு பிறகுதான் ஹெல்த் மிக்ஸ் விற்பனைக்கு கொண்டு வரப்படும். மேலும் ஆவின் பாலகத்தில் ஆவின் பாலகத்தில் ஆவின் தயாரிப்புகள் தவிர வேறு தயாரிப்புகள் விற்பனை செய்தால் ஆவின் உரிமம் ரத்து செய்யப்படும். ஆவின் நிறுவன பணியிடங்கள் முறைப்படி நிரப்பப்படும் .
ஆவின் பாலகங்களில் ஆவின் பொருட்கள் மட்டுமே விற்க வேண்டும். மற்ற பொருட்கள் விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீப காலமாக ஆவின் கடையில் மற்ற நிறுவனங்களின் ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் விற்கப்பட்டு வரும் நிலையில் அமைச்சர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.