தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளுக்கு செல்வதன் காரணமாக படுக்கை வசதி இல்லாத சூழல் உருவாகி உள்ளதால், தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
எனவே அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என்றும், அதிக கட்டணம் வசூல் செய்தால் மருத்துவ நிறுவனங்கள் சட்டத்தின் படி மருத்துவமனையில் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவர்களிடம் தரக்குறைவாக நடந்து கொள்ளும் பொதுமக்கள் மீதும் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.