Categories
மாநில செய்திகள்

உஷார்..! இதை செய்தால் சம்பளம் பிடித்தம்…. தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை…!!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு மலிவு விலையில் அரிசி, பருப்பு, கோதுமை, சீனி, எண்ணெய் மற்றும் இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது. இதனை ஏழை, எளிய மக்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர். மேலும் ரேஷன் கடைகள் மூலமாக உணவு பொருட்கள் மட்டுமல்லாமல் அரசின் நிதி உதவியும் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஊதியம், ரேஷன் கடை கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் ரேஷன் கடை பணியாளர்களின் அனைத்து நாட்களுக்கான ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |