தமிழகத்தில் கொரோனாவை ஒழிப்பதற்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. மக்களும் ஆர்வமாக முன்பதிவு செய்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இவ்வாறு தடுப்பூசி போடுபவர்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்பட்டு வருகின்றது.
அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதே அரசின் நோக்கம் ஆகும். இந்நிலையில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் போட வேண்டியது கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது .300 தொழிலாளர்கள் பணிபுரியும் அல்லது 10,000 சதுர அடி பரப்பு கொண்ட தொழிற்சாலைகளில் தகுதிவாய்ந்த சுகாதார ஆய்வாளர் ஒருவரை பணியமர்த்தி கொரோனா விதிமுறைகள் தொழிற்சாலையில் முறையாக கடைப்பிடிப்பது கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.