தமிழகத்தில் கல்வி மேலாண்மைத் தகவல் அமைப்பு எனப்படும் EMISல் பதிவு செய்த மாணவர்களுக்கு மட்டுமே அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. EMIS-இல் பதிவு செய்யாத மாணவர்களுக்கு அரசின் எந்த நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படாது.
எனவே, அரசு, அரசு உதவி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை சரி பார்த்து டிசம்பர் 16ம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும் எனவும், அதில் வேறுபாடு இருப்பின் அதனை திருத்தி டிச.16க்குள் பதிவேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.