நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை எப்போது வழங்கப்படும் என விவசாயிகள் அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இ கேஒய்சி செயல்முறையை முடித்த விவசாயிகளுக்கு மட்டுமே பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கில் நிதி டெபாசிட் செய்யப்படும் என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. விவசாயிகள் தங்கள் இ கேஒய்சி செயல்முறையை இந்த மாதம் இறுதிக்குள் முடிக்கவில்லை என்றால் ஜனவரி முதல் பிஎம் கிசான் நிதியின் 13வது தவணை நிறுத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளது.