திருவண்ணாமலை மாவட்டத்தில் கருவளையத்தை நீக்குவதாக கூறி நல்ல பாம்பை முகத்தில் தேய்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ் புதூரில் குமரேசன் என்ற பாம்பாட்டி வசித்து வருகிறார். அவர் அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களின் பலவீனத்தை தனக்கு சாதகமாக பயன் படுத்தியுள்ளார். அவர் தங்களின் முகத்தில் இருக்கும் கருவளையத்தை நீக்க வேண்டுமா? என்னிடம் உள்ள விஷ பாம்பை வைத்து முகத்தில் தேய்த்தால் போதும், அவை இருந்த இடம் தெரியாமல் போய்விடும், என்ற ஆசை வார்த்தைகளை பேசி நூதன சிகிச்சைக்காக அழைத்துள்ளார். அவரின் வார்த்தையை நம்பி பலரும் அந்த சிகிச்சை பெறுவதற்கு வந்தனர்.
அவர் நூறு ரூபாயை கையில் வாங்கிக்கொண்டு, அதிக விஷத்தன்மை உள்ள நல்ல பாம்பு ஒன்றை தனது கையில் சுற்றி கருவளையத்தை நீக்குவதாக அவர்களின் முகத்தில் செய்துள்ளார். அதனைக் கண்ட சிலர் பயந்து நடுங்கியபடி சிகிச்சை மேற்கொண்டனர். அதிலும் சில இளைஞர்கள் பயந்து ஓட்டம் பிடித்தனர். அவர் அபாயகரமான பாம்பு சிகிச்சையுடன் மட்டுமல்லாமல் மஞ்சள் கரு கலந்த மருந்து ஒன்றைக் கொடுத்து அதனை முகத்தில் தேய்த்து வருமாறு பொதுமக்களுக்கு டிப்ஸ் ஒன்றை கொடுத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.