Categories
தேசிய செய்திகள்

இதை செய்தால் WhatsApp பயன்படுத்த தடை…. அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் நடைமுறைக்கு நடந்து. சமூக வலைத்தளங்கள் இந்த விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.  இந்நிலையில் புதிய விதிகளுக்கு உட்பட்டு, மே மாதம் 15ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 15ஆம் தேதிக்குள் வாட்ஸ் அப்  பயனர்களின் 20 லட்சம் கணக்குகளை வாட்ஸ் அப் நிறுவனம் முடக்கியுள்ளது. இது தொடர்பாக வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம் ஒன்று அளித்துள்ளது.

அதன்படி தவறுகள் நடக்கும் முன்பாக அதை தடுப்பதில் கவனம் செலுத்துவதாகவும், ஒருவரின் கணக்கில் மூன்று கட்டங்களாக ஆராய்ந்து, அதாவது பதிவு செய்தல், தகவலை அனுப்புதல் மற்றும் அதற்கான எதிர்மறையான கருத்துக்களை பெறும் போது கண்காணிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் விதிமுறைகளை மீறும் பயனாளரின் கணக்கும் முடக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது. மேலும் இதில் 95% பயனர்கள் தொடர்ந்து வாட்ஸ்அப் மெசேஜ்களை, நிர்ணயிக்கப்பட்ட அளவையும் தாண்டி அதிக நபர்களுக்கு பார்வேர்ட் செய்ததாக கூறி உள்ளது. ஃபார்வர்டு மெசேஜ்கள் மூலம் போலி செய்திகள் பரவும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளது.

Categories

Tech |