பக் பவுண்டி (Bug bounty) எனப்படும் பிழைக்கு வெகுமதிகள் வழங்கும் முறையை, ஒவ்வொரு பெரிய தொழில்நுட்ப நிறுவனமும் கொண்டுள்ளன. அந்த வகையில், தற்போது கூகுள் நிறுவனம் ஒரு புதிய பக் பவுண்டி திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி கூகுளின் ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேரில் உள்ள பிழைகளை கண்டுபிடிப்பவர்களுக்கு வெகுமதி வழங்குவதாகவும், பிழைகளின் தீவிரத்தை பொறுத்து ரூ8,000 முதல் 25லட்சம் வரை வெகுமதி வழங்கப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.
பக் பவுண்டி என்பது செயலிகள், சேவைகள் அல்லது இயக்க முறைமைகளில் உள்ள பிழைகள் அல்லது பாதுகாப்பு குறைபாடுகளைக் கண்டறிவதற்காகப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் அல்லது நெறிமுறை ஹேக்கர்களுக்கு வழங்கப்படும் பண வெகுமதியாகும்