Categories
மாநில செய்திகள்

இதை செய்பவர்களுக்கு மஞ்சப்பை விருது…. ரூ.10,00000, ரூ.5,00000, ரூ.3,00000 பரிசு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழக மக்களிடையே நெகிழி பயன்பாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க தமிழக அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதம் கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதாவது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் அதற்கு மாற்றாக துணி, காகித பைகள் ஆகியவற்றை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில், மஞ்சப்பை விருது பெற விரும்பும் கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் வணிக வளாகங்கள் விண்ணப்ப படிவத்தை https://kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து மே 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்ப படிவத்தில் தனிநபரோ அல்லது நிறுவனத் தலைவர்கள் முறையாக கையொப்பமிட்டு இருக்க வேண்டும். மேலும் இதனை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருது பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 10 லட்சமும், இரண்டாம் பரிசாகக 5 லட்சமும், மூன்றாம் பரிசாக மூன்று லட்சமும் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |