பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அம்மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு தடை விதித்து ஏற்கனவே பலத்த கட்டுப்பாடுகளை விதித்திருந்தார். இந்த நிலையில் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அந்த அறிவிப்பில் பீகார் மாநிலத்தில் மதுபான விற்பனையை முற்றிலுமாக யார் நிறுத்துகிறார்களோ அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று கூறியுள்ளார். அது மட்டுமின்றி சட்டவிரோதமாக தொழில் செய்பவர்கள் அதை விட்டுவிட்டு நல்வழிக்கு வந்தால் அவர்களுக்கும் ஒரு லட்சம் பரிசு கிடைக்கும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Categories