தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு மத்தியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதற்கும் அரசு தனி சிகிச்சை பிரிவு தொடங்கியது மட்டுமல்லாமல் இதற்கு தேவையான மருந்துகளை தமிழகத்திற்கு அனுப்புமாறும் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது.
இதற்கு மத்தியில் கருப்பு பூஞ்சைக்கான மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்பதாக புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 1,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை கள்ளச்சந்தையில் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.