Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இதை செய்யலைன்னா தொற்றுப் பரவிடும்…. வேகமெடுக்கும் கொடிய கொரோனா… பொதுமக்களுக்கு அரசாங்கத்தின் வேண்டுகோள்…

மதுரை மாவட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தற்போது நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா தொற்று சீனாவிலிருந்து தோன்றி அனைத்து பகுதிகளிலும் பரவியது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் இதற்கான தடுப்பு மருந்துகளை சீரம் நிறுவனங்கள் தயாரித்து வரும் நிலையில் கொரோனா மேலும் பரவாமலிருக்க அனைத்து மக்களும் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள அரசாங்கம் வலியுறுத்துகிறது. இதற்கிடையே ஆங்காங்கே சில நபர்கள் கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்நிலையில் மதுரையிலும் தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பாலமேட்டில் அமைந்திருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து, மதுரை அரசு ஆஸ்பத்திரி குழுவினர்கள் பேரூராட்சியில் பணிப்புரியும் தூய்மைப் பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் தடுப்பூசியை செலுத்தியுள்ளார்கள். மேலும் அரசாங்கம் சார்பில் பொது மக்களும் தடுப்பூசியை போடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

Categories

Tech |