Categories
மாநில செய்திகள்

இதை செய்யாதவர்களுக்கு…. பொருட்கள் கொடுக்க கூடாது…. வியாபாரிகளுக்கு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. இதனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடைகள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும் என்று அரசு சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னையில் கடைகளில் மக்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் பொருட்கள் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று வியாபாரிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் கொரோனா வழிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் அபராதம் வசூலிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். உணவகங்களில் சமூக இடைவெளி  கடைபிடிக்கப்படுகிறதா? சானிடைசர் வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |