நீட் தேர்வு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது என்றும், பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் அரசியல் உள்நோக்கத்தோடு வழக்கு தொடர்ந்துள்ளார். அரசுக்கு உறுதுணையாக இருப்போம் என்பது போன்று சட்டமன்றத்தில் நயினார் நாகேந்திரன் பேசினார் என்று கடுமையாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கனவே விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று பாஜக தொடர்ந்து சொல்லி வருகிறது. எனவே பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுகவின் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நீட்தேர்வை எதிர்க்கின்றனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அருணன் பாஜகவை இபிஎஸ்- ஓபிஎஸ் கண்டிக்கவில்லை என்றால் அதிமுகவினரே நம்ப மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.