Categories
மாநில செய்திகள்

இதை செய்யாவிட்டால் பென்ஷன் கிடையாது….. தமிழக ஓய்வூதியதாரர்களுக்கு அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாட்டில் ஒவ்வொரு ஓய்வூதியதாரரும் ஆண்டுக்கு ஒருமுறை வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அறிவுருத்தியுள்ளது. அதாவது வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவு தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொருந்தும். ஜீவன் பிரமான் இணையதளம் மூலமாக ஓய்வூதியதாரர்கள் ஏதேனும் ஒரு சேவை முறையை பின்பற்றி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் நடைமுறையை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

அஞ்சல் துறை:

ஓய்வூதியதாரர்கள் இந்திய அஞ்சல் துறை வங்கியின் சேவையை பயன்படுத்தி தங்கள் இருப்பிடத்திலிருந்து கொண்டு தபால் துறை பணியாளர்கள் மூலமாக 70 ரூபாய் கட்டணம் செலுத்தி மின்னல் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

இ சேவை மையம்:

தமிழக அரசு இ-சேவை மற்றும் பொது சேவை மையங்களின் மூலமாக ஓய்வூதியதாரர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் உரிய கட்டணம் செலுத்தி மின்னும் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்து கொள்ளலாம்.

மேலும்ஓய்வூதியர்கள் சங்கத்தின் மூலமாகவும் கைரேகை குறியீட்டு கருவி பயன்படுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்

கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவி இல்லாமல் ஜீவன் பிரமான் முகம் பதிவு செயலியை பயன்படுத்தி வீட்டில் இருந்துகொண்டே மின்னணு வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.

இதனைத் தவிர ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழை www.tn.gov.in/karuvoolam என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து ஏதேனும் ஒரு அலுவலரிடம் கையொப்பம் பெற்று தபால் மூலமாக தொடர்புடைய கருவூலத்திற்கு அனுப்பலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |