நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்பிற்கும் எதிராக கருத்துகளை வெளியிடும் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்படும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் எச்சரித்துள்ளார்.
இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய அமைச்சர் எல் முருகன், நம் நாட்டில் கருத்து சுதந்திரம் என்பது உள்ளது. அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. இந்திய அரசுக்கு எதிராகவோ, ராணுவத்திற்கு எதிராகவோ, இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு எதிராகவோ ஏதாவது ஒரு நிறுவனம் செயல்பட்டால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதமாக 100க்கும் மேற்பட்ட youtube சேனல்கள் முடக்கப்பட்டிருக்கிறது.
இதில் சில சேனல்கள் பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வருகிறது. தேசத்திற்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை வெளியிடும் எந்த youtube சேனலாக இருந்தாலும் சரி எந்த ஒரு சமூக ஊடகமாக இருந்தாலும் சரி அவை தடை செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.