Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இதை சேர்த்தால்… பணியாரம் எண்ணெய் குடிக்காமல்… டேஸ்டா இருக்கும்…!!

வாழைப்பழ குழிப்பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்:

சிவப்பு அரிசி                         – அரை கப்
மைதா மாவு                          – அரை கப்
வெல்லம்                                 – 1 கப்
கசிந்த வாழைப்பழம்      – 2
ஏலக்காய்                                 – 3
தேங்காய் துருவல்              – கால் கப்
இட்லி சோடா                         – ஒரு பின்ச்
எண்ணெய்                                – தேவையான அளவு
பாதம் பொடித்தது                  – ஒரு தேக்கரண்டி
சுக்கு பொடி                               – அரை தேக்கரண்டி
உப்பு                                              – ஒரு சிட்டிகை

செய்முறை :

பாத்திரத்தில் சிவப்பு அரிசியை எடுத்து தண்ணீர் ஊற்றி இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும். பாதாம் பருப்பை பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும். வெல்லத்தை மிக்சிஜாரில் சேர்த்து அரைத்து தனியாக எடுத்து கொள்ளவும்

பின்பு ஊறிய சிவப்பு அரிசியை எடுத்து மிக்சியில் பொட்டு  நைசாக அரைத்து, அத்தனுடன்  1 சிட்டிகை உப்பு, ஏலக்காய், மைதா, வாழைப்பழத்தை சேர்த்து நன்கு  அரைத்து தனியாக எடுத்து கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து அதில் அரைத்த வெல்லத்தை போட்டு, அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு ஆற வைத்து கொள்ளவும். பின் அரைத்த அரிசி மாவில் இட்லி சோடா, பொடித்த பாதம்பருப்பு , சுக்குபொடி, தேங்காய் துருவல், வெல்ல கரைசலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

அடுப்பில் குழி பணியார சட்டியை வைத்து அதில் லேசாக எண்ணெய் விட்டு மாவை ஊற்றி மூடி வைத்து  3 நிமிடம் வேக விடவும். பின் மறுபுறம் திருப்பி போட்டு, மேலும் சிறிது எண்ணெய் விட்டு மூடி வைத்து  3 நிமிடம் வேகவிட்டு எடுத்தால் சுவையான வாழைப்பழ குழிப்பணியாரம் ரெடி.

Categories

Tech |