பெரம்பலூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பலரும் பின்பற்றுவதில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரத்துறை, காவல்துறையினர், நகராட்சி மற்றும் வருவாய்த்துறையினர் முககவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வரும்போது பொதுமக்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இருப்பினும் தற்போது பெரும்பாலானோர் முககவசம் அணிவதில்லை.
மேலும் பலரும் முக கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் குடும்பத்தினருடன் பயணம் செய்வதை காண முடிகிறது. சமூக இடைவெளியை பின்பற்றாமலும் செல்கின்றனர். கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பொதுமக்கள் சரியாக கடைப்பிடிப்பதில்லை. காரில் 3 பேருக்கு மேலும், ஆட்டோக்களில் 2 பேருக்கு மேலும் பயணிகளை டிரைவர்கள் ஏற்றி செல்கின்றனர். கொரோனாவின் அச்சுறுத்தலை பொதுமக்கள் பொருட்படுத்தவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.