மேற்குவங்க மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் ஜார் கிராம் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக பேரணி நடந்தது. இவற்றில் மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பங்கேற்று பேசினார். இந்நிலையில் அவர் பேசியதாவது, மாநிலத்தின் நிலுவைத்தொகையை மத்திய அரசு செலுத்தவில்லை எனில், சரக்கு மற்றும் சேவைவரி(ஜி.எஸ்.டி.) செலுத்துவதை நிறுத்தவேண்டியிருக்கும் என்று கூறினார்.
அதுமட்டுமின்றி மத்திய அரசு மாநிலங்களின் நிலுவைத்தொகையை செலுத்தவேண்டும் (அ) ஆட்சியிலிருந்து விலகவேண்டும் என்று அவர் கூறினார். மேலும் நம்முடைய நிதி நிலுவைத்தொகையைப் பெறுவதற்கு மத்திய அரசிடம் மன்றாட வேண்டுமா..? என கேள்வி எழுப்பிய மம்தா பானர்ஜி, நிலுவைத்தொகையை வழங்காவிட்டால் பாஜக அரசு ஆட்சியிலிருந்து விலகவேண்டும் என்று கூறினார்.