பாஜகவினர் இன்று முதலமைச்சரை சந்தித்து பேசியுள்ளனர்.
பாஜக நிர்வாகிகள் இன்று முதலமைச்சரை நேரில் சந்தித்து பேசினர். இதில் பாஜக நிர்வாகியான பொன். ராதாகிருஷ்ணன், பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜகவினர் கூறியதாவது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்தும், எங்களது தொகுதிகளில் ஏற்பட்ட பிரச்சனை குறித்தும் ஆலோசனை நடத்தினோம் என கூறியுள்ளனர்.