தேசிய மருத்துவ கவுன்சில் குழுவினர் சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் ஆய்வு நடத்தினார்கள்.
குழந்தைகள் மருத்துவம் தொடர்பான பட்ட மேற்படிப்பு வகுப்புகள் சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் தொடங்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தேசிய மருத்துவ கவுன்சில் இங்கு பட்ட மேற்படிப்பு வகுப்புகள் தொடங்க தேவையான வசதிகள் உள்ளதா ? என்று ஆய்வு நடத்தினார்கள். சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கு ஜெய்ப்பூர் மருத்துவ கல்லூரி குழந்தைகள் பிரிவு முதன்மை பேராசிரியர் டாக்டர் சர்மா தலைமையிலான குழுவினர் வந்தனர்.
அவர்கள் வகுப்பு நடத்த உபகரணங்கள், குழந்தை நல பிரிவு, போதுமான வசதிகள் உள்ளதா ? என அனைத்தையும் பார்வையிட்டனர். அப்போது அவர்களுடன் குழந்தைகள் நலப்பிரிவு டாக்டர் சிவகுமார், மருத்துவ கல்லூரி முதல்வர் ரத்தினவேல், உதவி மருத்துவ அலுவலர்கள் ரபி, மிதுன் ஆகிய பலரும் உடனிருந்தனர்.