நேற்று சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க ஸ்டாலின் பதிலுரை அளித்துப் பேசினார். அப்போது பேசிய அவர் ,மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யப்பட எவ்வளவு காலமானது என்பதை நீங்கள் எண்ணிப் பார்த்திட வேண்டும். காவல் துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது கடந்த 9ஆம் தேதி என்று பேசிய எதிர்கட்சி தலைவர் கோடநாடு வழக்கு நடத்துங்கள், வேண்டாம் என்று சொல்லவில்லை. புது விசாரணை செய்யுங்கள் என்று கூறினார்கள்.
அதற்கு நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கண்டிப்பாக நடத்துவோம். உண்மை குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்பிக்கவே முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. வேண்டுமென்றே திட்டமிட்டு எங்கள் மீது குற்றம் சாட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி அன்றைக்கு சொன்னார். கோடநாடு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போதே இந்த அவையில் கொடநாடு வழக்கு பற்றி முதலில் பேசியது யார் எதிர்கட்சி தலைவர் தான் என்று பேசியுள்ளார்.