ரஷ்யா சர்வதேச விண்வெளி நிலையத்தில் தனது ஒத்துழைப்பை நிறுத்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ரஷ்யா சர்வதேச விண்வெளி நிலையத்தில் தனது ஒத்துழைப்பை நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது. இதுதொடர்பான தகவலை ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ் கோஸ்மோஸின் தலைவர் டிமிட்ரி ரோகோசின் வெளியிட்டிருக்கிறார். இதன் மூலமாக நாசா, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்ஸி மற்றும் கன்னட விண்வெளி ஏஜென்ஸி நிறுவனம் உடனான பங்களிப்பும் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி டிமிட்ரி பதிவில் சர்வதேச விண்வெளி நிலையத்தின் கூட்டாளிகளின் மற்றும் கூட்டுத் திட்டங்களுக்கு இடையிலான இயல்பான உறவுகளை மீட்டெடுப்பது என்பது ரஷ்யா மீது வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத தடைகளை முழுமையாகவும் நிபந்தனை இன்றியும் நீக்குவதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும் என நான் நம்புகிறேன் என கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த நாசா ரஷ்யா, கனடா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் உடன் சர்வதேச விண்வெளி நிலையத்தை இயக்குவது தொடர்பான நடவடிக்கைகளை சர்வதேச அரசுகளின் விண்வெளி ஒத்துழைப்பை அமெரிக்கா தொடர்ந்து ஆதரித்து வருகிறது. புதிய மற்றும் தற்போது உள்ள அமெரிக்க ஏற்றுமதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் சர்வதேச விண்வெளி நிலையத்தின் தொடர்ச்சியான பாதுகாப்பு செயல்பாடுகளை உறுதிப்படுத்த அமெரிக்க மற்றும் ரஷ்ய இடையேயான ஒத்துழைப்பு தொடர்ந்து அனுமதிக்கின்றன என கூறியுள்ளது.