Categories
உலக செய்திகள்

“இதை நாங்க செய்ய மாட்டோம்”…. போர் குறித்து…. ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வெளிப்படையான தகவல்….!!

உக்ரைன் மீது ரஷ்ய அணு ஆயுத தாக்குதலை நடத்தாது என்று ரஷ்ய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா அணு ஆயுத தாக்குதல்களை நடத்தலாம் என உக்ரைனை எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து ரஷ்ய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அலெக்ஸி சைய்ட்செவ் கூறியதாவது “உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுத தாக்குதல்கள் நிகழ்த்தாது. மேலும் இது வடிகட்டிய பொய். குறிப்பாக அணு ஆயுதப் போர் நடந்தால் எந்த நாளும் வெற்றி பெற முடியாது என ரஷ்யா உறுதியாக நம்புகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |