Categories
தேசிய செய்திகள்

இதை நிறுத்திவிட்டு…. ஊரடங்கால் வேலையை இழந்தவர்களுக்கு…. மாதம் ரூ.6000 கொடுங்கள்…!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டட பணியை கைவிட கோரி மோடிக்கு சோனியா, சரத் பவார், தாக்கரே, மம்தா, ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.

அதில் புதிய நாடாளுமன்ற பணிக்கு ஒதுக்கிய நிதியை ஆக்சிஜன், தடுப்பூசி வாங்க பயன்படுத்த வேண்டும். இலவச தடுப்பூசிக்கு முகாம்களை தொடங்க வேண்டும். ஊரடங்கால் வேலையை இழந்தவர்களுக்கு மாதம் ரூபாய் 6000 உதவித்தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |