Categories
மாநில செய்திகள்

இதை பற்றி மட்டும்தான் பேசணும்…. ஓபிஎஸ் குறித்து யாரும் பேசக்கூடாது?…. இபிஎஸ் கட்டளை….!!!!!

வருகிற 17ம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு கலந்துகொள்ள இருக்கிறது. இந்த நிலையில் தமிழக சட்டமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க உட்கட்சி பிரச்சனை தொடர்பாகவும், ஓபிஎஸ் குறித்தும் எதுவும் பேசக்கூடாது என்று இபிஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் உட்க்கட்சி விவகாரம், நீதிமன்ற வழக்குகளை கையாளுவது பற்றி விவாதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி வருகிற 17 ஆம் தேதி தொடங்கப்பட உள்ள சட்டமன்ற கூட்டத்தில் தொகுதி பிரச்சனை, தி.மு.க ஆட்சி குறித்து மட்டுமே பேசவேண்டும் என்று இபிஎஸ் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது

Categories

Tech |