Categories
சினிமா தமிழ் சினிமா

“இதை பார்த்ததிலிருந்து என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை”… இங்கிலாந்து பிரதமர் வீடியோவை பகிர்ந்த நடிகர் விக்ரம்…!!!!!

இங்கிலாந்து வரலாற்றில் முதல் இந்திய வம்சாவளி ரிஷி சுனக் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவருக்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக இருப்பது அந்த நாட்டு மக்கள் ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என தெரிகின்றது. அவர் கருப்பினத்தவர், வேறு நாட்டுக்காரர் நம் பிரச்சினைகளை அவரால் சரியாக புரிந்து கொள்ள முடியாது என டிவி நிகழ்ச்சியில் ஒருவர் பேசி இருக்கிறார்.

 

தி டெய்லி ஷோ நிகழ்ச்சியின் தொகுப்பாளர் இந்த வீடியோவை பகிர்ந்து ஒருவரின் கொள்கை, திறமை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிட வேண்டுமே தவிர அவரது நிறத்தை மதிப்பிடக்கூடாது என பேசி இருக்கிறார். இந்த நிலையில் இந்த வீடியோவை பகிர்ந்த நடிகர் விக்ரம் இதை பார்த்ததிலிருந்து என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை மன்னிக்கவும். இதனை பகிர வேண்டும் என நினைத்தேன். இந்தியாவிற்கு பெருமை முதல் தமிழ் இந்தியன் அமெரிக்காவின் குடியரசு துணைத் தலைவர் இப்பொழுது முதல் இந்திய வம்சாவளி இங்கிலாந்து பிரதமர் வா ராஜா வா என குறிப்பிட்டு இருக்கிறார்.

Categories

Tech |