Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதை பூட்டிட்டு தானே போனோம்..! அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள லக்கையன்கோட்டையில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம் 15-ஆம் தேதி இந்த கடையில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்திற்கு மதுபானம் விற்கப்பட்டது. இதையடுத்து இங்கு பணியாற்றிய விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் அந்த பணத்தை கடந்த 15-ஆம் தேதி டாஸ்மாக் கடையில் உள்ள இரும்பு லாக்கரில் வைத்துவிட்டு கடையை பூட்டிவிட்டு சென்றனர். அதன்பின் கடையை கடந்த 16-ஆம் தேதி திறக்க வந்தனர். அப்போது பூட்டப்பட்டிருந்த கடையின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று சோதித்து பார்த்தனர். அப்போது விற்பனைக்காக வைத்திருந்த 528 மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

அந்த மது பாட்டில்களின் மதிப்பு சுமார் 70 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. கடையில் இரும்பு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த பணத்தை திருடர்கள் திருடி செல்வதற்காக லாக்கரை உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதை உடைக்க முடியவில்லை. அதனால் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் தப்பியது. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து அங்கு தடயங்களை சேகரித்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |