Categories
உலக செய்திகள்

இதை போட்டீங்கன்னா மாஸ்க் போடவே வேண்டாம்…. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்…. சுவிட்சர்லாந்து வல்லுநர்கள் கருத்து….!!

சுவிட்சர்லாந்திலிருக்கும் சரிபாதி மக்கள் முழுமையான தடுப்பூசியை எடுத்துக்கொண்டால் சுவிட்சர்லாந்தில் கோடைகாலத்தில் பொதுமக்களுடைய இயல்பு வாழ்க்கை திரும்பும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.

உலக நாடுகள் முழுவதும் பரவிய கொரோனா அனைத்து பகுதிகளிலும் சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. அந்த வகையில் சுவிட்சர்லாந்திலிருக்கும் நிர்வாகங்கள் கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கு சரியான பாதையை தேர்ந்தெடுத்து, அதில் செல்வதாக தொற்று தொடர்பான வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் வல்லுனர்கள் கூறியதாவது, தொற்றுக்கு எதிராக மாடர்னா மற்றும் பைசர் நிறுவனங்களில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை வாங்கியுள்ளது என்றுள்ளார்கள். இந்த நிலையில் சூரிச் பல்கலைக்கழக மருத்துவமனையினுடைய நோய் எதிர்ப்பு வல்லுனரான ஸ்டீவ் பாஸ்கோலா சரி பாதி மக்கள்தொகையினர்கள் 2 டோஸ்களையும் பெற்றுக்கொண்டால், செப்டம்பர் மாதத்தில் சுவிட்சர்லாந்திலிருக்கும் மக்கள் மாஸ்க் போடாமல் இயல்பு நிலைக்கு திரும்பலாம் என்றுள்ளார். இதனையடுத்து சுவிட்சர்லாந்தில் தினமும் 51,000 டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வருவதால் டிசம்பர் முதலில் இருந்தே ஏப்ரல் வரை மொத்தமாக 2.6 மில்லியன் அளவிலான தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கிறது.

Categories

Tech |