தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரண்டு தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சியினர் ஒருவரையொருவர் குறைகூறி மக்களிடையே வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆர்வத்துடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட எண்டியூர் கட்டளை அதிமுக சார்பாக ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் மற்றும் சிவி சண்முகம் ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் எம்எல்ஏ, “வாக்காள பெருமக்களே நீங்கள் எங்களை முதுகில் குத்திராதீங்க. நெஞ்சில் கூட இரண்டு அடி அடித்து விட்டு இரட்டை இலைக்கு வாக்களித்து விடுங்கள். நாங்கள் புரட்சித்தலைவி அம்மா வழியில் வந்தவர்கள். அதனால் நாங்கள் எப்பொழுதுமே சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுவோம்” என்று கூறியுள்ளார்.