Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை மதிக்கவே இல்ல..! அதிரடி ஆய்வில் சிக்கியவர்கள்… அதிகாரிகள் நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் முழு ஊரடங்கை கடைபிடிக்கிறார்களா ? என்பதை கண்காணிப்பதற்காக காரைக்குடி தாசில்தார் அந்தோணிராஜ் தலைமையில் அதிகாரிகள் பாதரக்குடி, காரைக்குடி நகரம், கழனிவாசல், மானகிரி, செக்காலைக்கோட்டை, செஞ்சை, கோட்டையூர், ஸ்ரீராம் நகர் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஊரடங்கு தடையை மீறி விற்பனையில் ஈடுபட்ட இறைச்சி கடை மற்றும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் ஓட்டல்களுக்கு ரூ.10,400 அபராதம் விதிக்கப்பட்டது.

Categories

Tech |