ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றிய நிலையில் அங்கிருந்து மக்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வெளிநாடுகளுக்கு தப்பித்து வருகின்றனர். மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக விமான நிலையத்தில் கூடியுள்ளதையடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாகவும், 15க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து அடுத்ததாகவும் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த இரட்டை குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளதாகவும், இதில் 13 பேர் அமெரிக்க படையினர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஐ. எஸ்.ஐ. எஸ் அமைப்பு இந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இதை எப்போதும் மறக்க மாட்டோம். தேடிவந்து வேட்டையாடி இதற்கான விலையை கொடுப்போம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.