Categories
அரசியல்

இதை முதலில் செய்யுங்க…. அப்ப தான் பொருளாதாரம் வளர்ச்சியடையும்…. ஓபிஎஸ் வைத்த கோரிக்கை…!!!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீரழிக்கும் வகையில் செயல்படுவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்கவும், கொலை குற்றங்களில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வழங்கவும் முதல்வருக்கு ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு மாநிலத்தின் வளர்ச்சி அதிகரிக்க வேண்டுமென்றால், அந்த மாநிலத்தின் மக்கள் வளம் பெறவேண்டுமென்றால், முதலில் அந்த மாநிலத்தினுடைய பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும். மாநிலத்தின் பொருளாதாரம்  வளர்ச்சி அடைவதற்கு மனிதவள மேம்பாடு, உட்கட்டமைப்பு வசதி, சிறப்பான கல்வி, ஆரோக்கியம் ஆகியவை இருந்தாலும் இதை எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது அமைதியான சூழல்.

அதாவது ஒரு மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க வேண்டுமென்றால் அங்கு அமைதியான சூழல் இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சினைகல் நிலவினால் அங்கு பொருளாதார வளர்ச்சி இருக்காது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், நோய்த் தொற்று பாதிப்புகள் கட்டுக்குள் வந்து பொருளாதார பாதிப்பு ஓரளவிற்கு தொடங்குகின்ற இந்த சூழலில் கடந்த 10 நாட்களாகவே ஆங்காங்கே அன்றாடம் கொலை குற்றங்கள் நடந்து வருகிறது. இது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.

இதுபோன்ற மனிதாபிமான செயல்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அதுமட்டுமன்றி சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினரை திருப்பி தாக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இது போன்ற வன்முறை சம்பவங்களால் தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.

எனவே பொருளாதார வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் கொலைக் குற்றங்களை தடுத்து அமைதியான சூழலை உருவாக்கும் வகையில் முதல்வர் சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி, சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர அதிகாரிகளுக்கு தக்க அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |