விருதுநகர் மாவட்டத்தில் இன்று அனைத்து பகுதிகளிலும் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைத்து அதில் 70 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளது. இதனை அடுத்து முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ள நினைப்பவர்கள், 18வயதுக்கு மேற்பட்டோர், அருகில் உள்ள கொரோனா தடுப்பூசி மையத்திற்குச் சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
அதன் பின்னர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க விரும்புவோர் அனைவரும் தாங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று அல்லது குறுஞ்செய்தி எண்ணை விற்பனையாளரிடம் காண்பித்தால் மட்டுமே அவர்களுக்கு மதுபானம் வழங்கப்படும். அதன் பின்னர் அனைத்து டாஸ்மாக் விற்பனையாளர்களும் தங்களிடம் மதுபானம் வாங்கிச் செல்லும் அனைவரும் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா? என்று உறுதி செய்த பின்னரே அவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.