விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். இந்த வருடம் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி 2ஆம் பாகத்திலும் அவர் கலந்துக்கொண்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய “காமெடி ராஜா கலக்கல் ராணி” நிகழ்ச்சியில் பங்கேற்ற புகழ் சினிமாவில் நடித்து வருவதால் நேர பிரச்னை காரணமாக அதிலிருந்து விலகினார். இதனையடுத்து வலிமை, யானை உள்ளிட்ட படங்களில் புகழ் நடித்து முடித்துள்ளார்.
இந்த நிலையில் புகழ் தனது பெயரில் பண மோசடி செய்வதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ஈரோடு, மதுரை, திருச்சி என நிகழ்ச்சியில் என்னை பங்கேற்க வைப்பதாக கூறி பணம் பறிக்கின்றனர். வரும் 4ஆம் தேதி கூட நான் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதாக பண மோசடி செய்துள்ளனர். தற்போது நான் பிலிப்பைன்ஸில் இருக்கின்றேன். நிகழ்ச்சிக்கு வருவதென்றால் நானே வீடியோ வெளியிடுவேன். ஆகவே யாரும் ஏமாற வேண்டாம்’ என்று புகழ் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.