Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இதை யாரு பண்ணிருப்பா?…. கடையின் முன்பு இருந்த மோட்டார் சைக்கிள்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழவாசல் குறிச்சி கிராமத்தில் காளிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள கடையின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் காளிதாஸ்  திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து காளிதாஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை  திருடிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |