Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதை யாரு விட்டுட்டு போனது..? ஏ.டி.எம். மையத்தில் இருந்த பணம்… காவல்துறையினர் விசாரணை..!!

பெரம்பலூரில் ஏ.டி.எம். எந்திரத்தில் எடுக்காமல் விட்டுச்சென்ற 10 ஆயிரம் பணத்தை வாலிபர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ஏ.டி.எம். மையத்தில் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி நேற்றுமுன்தினம் காலையில் ஒருவர் ரூ.10,000 எடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் பணம் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து வருவதற்கு சிறிது தாமதம் ஏற்பட்டதால் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இல்லை என்று எண்ணி அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். ஆனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து சிறிது நேரம் கழித்து ரூ.10 ஆயிரம் வெளியே வந்துள்ளது. அந்த நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தாலுகா நல்லதங்காள்பட்டியில் வசித்து வரும் சரண்ராஜ் என்பவரது மகன் பிரவீன் ஏ.டி.எம்.-க்கு சென்றுள்ளார்.

அப்போது அவர் அந்த பணத்தை எடுத்து தனக்கு பின்னால் நின்று கொண்டிருந்த புதிய மதனகோபாலபுரத்தை சேர்ந்த காளியப்பன் என்பவரது மகன் அன்பழகனிடம் கொடுத்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு கூறிவிட்டு சென்றுள்ளார். அதன்பின் அன்பழகன் அந்த பணத்தை பெரம்பலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து காவல்துறையினர் ஏ.டி.எம். மையத்தில் பணத்தை எடுக்காமல் விட்டு சென்ற நபர் யார் ? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பணத்தை எடுத்து நேர்மையான முறையில் ஒப்படைத்த வாலிபர்களை காவல்துறையினர் வெகுவாக பாராட்டினர்.

Categories

Tech |