Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இதை யூஸ் பண்ண கூடாது” கடைகளில் திடீர் சோதனை…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை பேரூராட்சி பகுதிகளில் இருக்கும் கடைகளில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் களியக்காவிளை சந்தை மற்றும் கறிக்கடைகளில் சோதனை மேற்கொண்டதில், அரசால் தடை செய்யப்பட்ட 15 கிலோ பிளாஸ்டிக் பைகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து பிளாஸ்டிக் பைகளை பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

பின்னர் விதிமுறைகளை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினாலோ, விநியோகம் செய்தாலோ கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சீல் வைத்தால் குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்திய பிறகு மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று கடை திறக்க ஒப்புதல் அளிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |