Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை வன்மையாக கண்டிக்கிறோம்… பல்வேறு அமைப்பினர்… சிவகங்கையில் பரபரப்பு ஆர்ப்பாட்டம்..!!

சிவகங்கையில் பல்வேறு அமைப்பினர், அரக்கோணத்தில் நடந்த இரண்டு பேர் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிவகங்கை அரண்மனை வாசலில் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அரக்கோணத்தில் தலித் இளைஞர்கள் இரண்டு பேர் படுகொலை செய்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலாளர் வீரையா தலைமையில் நடைபெற்றது. இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கந்தசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வீரபாண்டி, மாவட்ட தலைவர் பொன்னுசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயராமன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுரேஷ், அகில இந்திய வக்கீல் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மதி, மாவட்டச் செயலாளர் தென்னரசு, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் பூபதி, விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மணியம்மா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் உலகநாதன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் செல்லமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை சங்கத்தின் பொறுப்பாளர் வக்கீல் கிருஷ்ணன், மாவட்ட குழு உறுப்பினர் வடிவேலு ஆகிய பலரும் கலந்து கொண்டனர்.

Categories

Tech |