இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை புதிய பேருந்து நிலையத்தில், அரக்கோணத்தில் நடந்த இரட்டை கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை புதிய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சம்மந்தன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் மேகலா முன்னிலை வகித்தார். செல்வராசு எம்.பி. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அரக்கோணத்தில் நடந்த இரட்டை கொலையை கண்டித்தும், குற்றவாளிகளை குண்டர் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரபோஜி, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்டச் செயலாளர் பாஸ்கர், ஏ.ஐ.டி.யூ.சி. மீனவ சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.