சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பேருந்து நிலையம் அருகே விலை உயர்வை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.புதூர் ஒன்றிய விவசாயிகள் சங்க செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் டெல்லியில் போராடும் விவசாயிகள் உரவிலை உயர்வு ஆகிய கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சேதுராமன், விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் காந்திமதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.