திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே விவசாயிகள் உரம் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே உரம் விலை உயர்வை கண்டித்து புதுரோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை ஒன்றிய தலைவர் பெரியசாமி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் பிச்சைமுத்து, ஒன்றிய செயலாளர் சவடமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துசாமி, மாவட்ட செயலாளர் பெருமாள், பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் சங்கர், ஒன்றிய செயலாளர் முனியப்பன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உரம் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.