சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்கள் மன்றத்தினர் பரபரப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக மக்கள் மன்றத்தின் சார்பில் காரைக்குடி ஐந்து விலக்கு அருகே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தினை மக்கள் மன்றத் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராசகுமார் தலைமை தாங்கி நடத்தினார். மேலும் செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பசுமை தமிழகம் மாவட்ட அமைப்பாளர் தமிழ் கார்த்திக், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலாளர் சகுபர் சாதிக், ஆம் ஆத்மி கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் அப்துல் ஜாபர் ஆகியோர் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன உரை நிகழ்த்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி, முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.ம்