Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இதை வாங்கி தாங்க…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

நெல்லையில் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்துள்ள வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் ஸ்ரீதரன் என்பவர் வசித்து வந்தார். இதற்கிடையே இவர் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்தார். இந்த நிலையில் ஸ்ரீதரன் அவரது பெற்றோரிடம் மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்கும்படி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த ஸ்ரீதரன் வீட்டில் யாருமில்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |